Arts, culture, entertainment and media
“லண்டன் போல சென்னையிலும் போட்டிகளை நடத்த வேண்டும்..” - நடிகர் அஜித்குமார் விருப்பம்

“விளையாட்டுத் துறையை மேம்படுத்த விஜய் தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக லண்டனில் அவர் அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையை மேம்படுத்த முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தன் கடுமையான பணிச்சூழலுக்கு இடையே முதல்வர் விஜய் இங்கு வருகை தந்துள்ளார்.
லண்டனில் உள்ள ‘சில்வர் ஸ்டோன்’ ரேஸிங் ட்ராக் போன்றதை சென்னையில் உருவாக்க முதல்வர் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார். லண்டனில் நடைபெறுவது போன்ற போட்டிகள் சென்னையில் நடைபெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்” என தெரிவித்துள்ளார்.
விஜய் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ! 🥺❤️
புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேற்று சென்னையிலிருந்து புறப்பட்டு துபாய் வழியாக லண்டன் சென்றடைந்தார். அவர் நாளை லண்டனில் உள்ள 'சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்'-ஐ பார்வையிடுகிறார். தொடர்ந்து அங்கு நடைபெறும் கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைக்க இருப்பதாக லே மான்ஸ் கோப்பை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிகாவின் 20ம் ஆண்டு திருமண உடையில் இவ்வளவு காதல் குறியீடுகளா? வெளியான சுவாரஸ்ய தகவல்கள்!
20ம் ஆண்டு திருமண உறவை கொண்டாடும் விதமாக, சூர்யா - ஜோதிகா மீண்டும் திருமணம்!
இதில் காதலை உணர்த்தும் வகையில் ஜோதிகாவின் உடையில் பல குறியீடுகள் இருந்துள்ளன.
சுவாரஸ்யமான அந்த டீடெய்ல்ஸை இங்கே தெரிஞ்சுக்கோங்க!
