Arts, culture, entertainment and media
அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்.. அதிகாரபூர்வ அறிவிப்பு

லண்டனில் நடக்கும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய், புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்று லண்டன் புறப்பட்டார். துபாய் வழியாக லண்டன் செல்லும் முதல்வர் விஜய், தொழிலதிபர்களை சந்தித்து பேச உள்ளார். இந்த பயணத்தை முடித்துவிட்டு 17-ம் தேதி சென்னை திரும்புகிறார். முன்னதாக நடந்து முடிந்த சட்டப்பேரவையில், உலகத்தரம் வாய்ந்த ஒரு 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' (Motor Sports City) மாநிலத்தில் அமைக்கப்படும் விஜய் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிடுகிறார். இதன் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற 'சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்'-ஐ பார்வையிடும் விஜய், அங்கு நடைபெறும் கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைக்க இருப்பதாக லே மான்ஸ் கோப்பை நிர்வாகம் அறிவித்துள்ளது.
A special guest will be waving the green flag at Silverstone this weekend! 👉 C. Joseph VIJAY
இந்த கார் பந்தயத்தில் தான் நடிகர் அஜித்குமார் தனது குழுவினருடன் பங்கேற்கிறார். அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை விஜய் தொடங்கி வைக்க இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக லண்டனில் தங்கியிருந்து தனது குழுவினருடன் அஜித் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அஜித்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு அவர் நடிப்பில் ‘விடா முயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய 2 திரைப்படங்கள் வெளியாகின. ஓராண்டு மேலாகியும் அஜித் நடிப்பில் எந்த புதிய படமும் வெளியாகவில்லை.
அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க இருப்பதாகவும், அதனை ஷாலினி தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. ஓரிரு மாதங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.
AI-ல் ஒரு வீடியோ உருவாக்க.. எவ்வளவு தண்ணீர் செலவாகும் தெரியுமா?
AI இயங்குவதற்கு ஆயிரக்கணக்கான பிரத்யேக Chips 24 மணி நேரமும் இயங்க வேண்டும்.
இவை மிகக் குறுகிய காலத்தில் கடுமையான வெப்பத்தை வெளியிடும்.
அந்த வெப்பம் எவ்வளவு? எவ்வளவு தண்ணீர் செலவாகும் அதற்கு?
