டில்லியில் கட்டடம் இடிந்து விழுந்தது; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
புதுடில்லி: டில்லியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், மாணவர்கள் 50 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
தென்மேற்கு டில்லியின் சத்யா நிகேதன் பகுதியில் இன்று மதியம் 1.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால், இந்த கட்டடம் மாணவர்களுக்கான மாதாந்திர கட்டண விடுதியாக செயல்பட்டு வந்துள்ளது.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான மாணவர்கள் உள்ளே இருந்திருக்கலாம் என்றும், குறைந்தபட்சம் 50 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று இந்த விபத்தை நேரில் பார்த்தவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.





/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)




