Politics
கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!

தில்லி கட்டட விபத்தால் நேர்ந்த இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளை முதல்வர் ரேகா குப்தா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கட்டட இடிபாடுகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் - பிடிஐ
தென்மேற்கு தில்லியில் உள்ள சத்யா நிகேதன் அருகே உள்ள நானக்புரா குருத்வாராவில் செயல்பட்டு வந்த மாணவர் விடுதி கட்டடம் இன்று பிற்பகல் இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் கட்டட விபத்தில் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளில் உள்ளூர் மக்கள் உதவியுடன் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
8 தீயணைப்பு வாகனங்களில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். 12 தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டு, உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள கட்டடம் காலி செய்யப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களைப் பாதுகாப்பாக மீட்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவிகளை வழங்கவும் அனைத்து முயற்சிகளும் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் இடத்திற்கு முதல்வர் ரேகா குப்தா விரைந்தார். அங்கு மீட்புப் பணிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் கிடைப்பதை உறுதி செய்தார். மேலும், மீட்புப் பணிகளின் நிலவரம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
Building collapse rescue operation Chief Minister Rekha Gupta inspects the site in person
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.