Politics
விடுதிக் கட்டட விபத்து: தில்லி மாநகராட்சியும் பல்கலைக்கழகமும் பொறுப்பு! உயர் நீதிமன்றம்

விடுதிக் கட்டடம் இடிந்து விழுந்த விவகாரத்தில் தில்லி மாநகராட்சியும் பல்கலைக்கழகமும் பொறுப்பு என உயர் நீதிமன்றம் தெரிவித்தது குறித்து...
விடுதிக் கட்டடம் இடிந்து விழுந்த விவகாரத்தில் தில்லி மாநகராட்சியும் பல்கலைக்கழகமும் பொறுப்பு என உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை (செப். 7) தெரிவித்தது.
தில்லியின் சத்ய நிகேதன் பகுதியில் தங்கும் விடுதியின் கீழ்தளத்தில் தண்ணீர் தேங்கும் பிரச்னை இருந்ததால், அதனை சரி செய்யும் பணி சட்டவிரோதமாக நடைபெற்று வந்த நிலையில், அந்தக் கட்டடம் இடிந்து விழுந்து 7 பேர் பலியாகினர்.
இடிந்து விழுந்த கட்டடம் 40 ஆண்டுகள் பழமையானது என்றும், அஸ்திவராத் தூண்கள் அமைக்கப்படாமல் கட்டடம் சட்டவிரோதமாக இருந்துள்ளதும் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இந்த விவகாரம் குறித்த பொதுநல மனுவை அவசர வழக்காக எடுத்தக்கொண்ட தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
இதுகுறித்து விசாரித்த நீதிபதிகள், இந்தத் துயரச் சம்பவத்துக் கட்டட உரிமையாளர்கள் மட்டுமல்லாமல், வெளியூர் மாணவர்களுக்குப் போதுமான தங்கும் வசதிகளை வழங்கத் தவறிய தில்லி மாநகராட்சி மற்றும் தில்லி பல்கலைக்கழகமும் பொறுப்பு என்று தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, மனித உயிர்களைக் காப்பாற்றும் வகையில் மீட்புப் பணிகளை இரட்டிப்பாக்குமாறு அதிகாரிகளுக்கு அந்த அமர்வு உத்தரவிட்டது.
மேலும், இந்த மனுவுக்கு 10 நாள்களுக்குள் தனித்தனியாக பதிலளிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், செப்டம்பர் 25 ஆம் தேதி இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணைகள் நடத்தப்படும் என்றும் உத்தரவிட்டனர்.
The High Court stated on Monday (Sept. 7) that the Delhi Municipal Corporation and the university are responsible in the matter of the hostel building collapse.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.