Politics
ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்! தில்லி முதல்வர்

தில்லி முழுவதும் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட ஐந்தாவது தளத்துடன் இருக்கும் கட்டடங்களுக்கு உடனடியாக சீல் வைக்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளது குறித்து...
தில்லி முதல்வா் ரேகா குப்தா - கோப்புப் படம்
தில்லி முழுவதும் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட ஐந்தாவது தளத்துடன் இருக்கும் கட்டடங்களுக்கு உடனடியாக சீல் வைக்க அம்மாநில முதல்வர் திங்கள்கிழமை (செப். 7) உத்தரவிட்டுள்ளார்.
தில்லியின் சத்ய நிகேதன் பகுதியில் தங்கும் விடுதியின் கீழ்தளத்தில் தண்ணீர் தேங்கும் பிரச்னை இருந்ததால், அதனை சரி செய்யும் பணி சட்டவிரோதமாக நடைபெற்று வந்த நிலையில், அந்தக் கட்டடம் இடிந்து விழுந்து 7 பேர் பலியாகினர்.
இடிந்து விழுந்த கட்டடம் 40 ஆண்டுகள் பழமையானது என்றும், அஸ்திவராத் தூண்கள் அமைக்கப்படாமல் கட்டடம் சட்டவிரோதமாக இருந்துள்ளதும் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இந்த சம்பவம் குறித்து தில்லி முதல்வர் ரேகா குப்தா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தில்லி மாநகராட்சியின் துணை ஆணையர், நிர்வாகப் பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் ஆகியோர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தில்லி முழுவதும் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட ஐந்தாவது தளத்துடன் இருக்கும் கட்டடங்களுக்கு உடனடியாக சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சத்ய நிகேதன் பகுதியில் உள்ள அனைத்து விடுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விதிமீறல்களுக்கு எதிராக, சீல் வைப்பதுடன் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்த சம்பவத்தை தில்லி அரசு மிகவும் தீவிரமாகக் கையாண்டுள்ளது. குற்றவாளி அல்லது பொறுப்பாளர் எனக் கண்டறியப்படும் யாரும் தப்பிக்க முடியாது என்று ரேகா குப்தா குறிப்பிட்டுள்ளார்.
MCD Deputy Commissioner, Executive Engineer, Superintending Engineer, Assistant Engineer and Junior Engineer have been suspended with immediate effect following the tragic Satya Niketan incident.
The building owner has been arrested.
The Chief Minister of Delhi ordered on Monday (Sept. 7) the immediate sealing of buildings across the city that have an illegally constructed fifth floor.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.