தினமலர் பவள விழா தபால் தலை இன்று வெளியீடு: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
சென்னை: 'தினமலர்' நாளிதழின் பவள விழாவை முன்னிட்டு, சென்னையில் இன்று(செப்.,5) தபால் தலை வெளியீட்டு விழா நடக்கிறது. இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தபால் தலையை வெளியிட்டு, பவள விழா சிறப்புரை ஆற்றுகிறார்.
கடந்த 75 ஆண்டுகளாக, ஒரு செய்தித்தாளாக மட்டுமல்லாமல், மக்களின் நம்பிக்கையின் குரலாக, 'தினமலர்' நாளிதழ் திகழ்ந்து வருகிறது.
சொற்களில் அச்சமின்மை, கொள்கைகளில் தடம் மாறா உறுதி, உண்மையின் உரைகல் என, அர்ப்பணிப்புடன் பயணித்து வரும், 'தினமலர்' நாளிதழுக்கு, இந்த ஆண்டு பவள விழா. அதை முன்னிட்டு, தபால் தலை வெளியீட்டு விழா, சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அரங்கில், இன்று மாலை நடக்கவுள்ளது.





/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)






