Lifestyle and human interest
தமிழினத்தின் முகவரி தினமலர்: வாசகர்கள் புகழாரம்
*வாழ்விற்கு வழிகாட்டி பத்தாம் வகுப்பு கேள்வி - பதில்கள், மேல்நிலைப் பள்ளி தேர்வு வழிகாட்டிகள்,

பத்தாம் வகுப்பு கேள்வி - பதில்கள், மேல்நிலைப் பள்ளி தேர்வு வழிகாட்டிகள், வேலைவாய்ப்பு செய்திகளாய் என் கனவுகளுக்கு சிறகுகள் தந்தாய். 50 ஆண்டுகளாக என் காலை பொழுதின் முதல் நண்பன் தினமலர். நாள்தோறும் செய்தி மட்டுமல்ல, நாட்டு நடப்பை உணர்த்தி, உலகத்தை அறிமுகப்படுத்தி, அறிவை வளர்த்து, வாழ்க்கைக்கு வழிகாட்டியது.
தினமலர் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே உள்ளது. வாரமலர், சிறுவர்மலர், ஆன்மிகமலர், துணுக்கு மூட்டை, சினிமா செய்திகள் என ஒவ்வொரு பகுதியும் எனக்கு மிகவும் பிடித்தவை. தினமலரைப் படிப்பது ஒரு விதமான அன்பும், பாசமும், பற்றும். ஊர் மாறியது... மாநிலம் மாறியது... வாழ்க்கை மாறியது... ஆனால் என் தினமலர் வாசிப்பு மட்டும் மாறவில்லை.
வைஷ்ணவி நார்த் 24 அபார்ட்மென்ட், ஹெப்பால்
தமிழ் மக்களின் நம்பிக்கையாக திகழும் நமது தினமலர் நாளிதழ் 76-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உண்மை, நேர்மை, துணிவு என்ற தாரக மந்திரத்துடன் தமிழ் மக்களுக்கு சிறந்த செய்திகளை சுடச்சுட வழங்கி வரும் தினமலர், நுாற்றாண்டைக் கடந்து தொடர்ந்து வெற்றிநடை போட வாழ்த்துகிறேன்.
ஆர்.ஆர்., நகர்.
தினமலர் என்பது சராசரி பத்திரிகை அல்ல. மக்களின் பாட புத்தகம். தமிழினத்தின் முகவரி. 75 ஆண்டுகளாக உலக தமிழர்களை வழிநடத்தும் கலங்கரை விளக்கம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தமிழர்கள் சித்ரவதைக்கு ஆளான போது, அதை தட்டி கேட்கவும், தமிழர்களை மீட்கவும் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு களப்பணி ஆற்றியவர் டி.வி.ராமசுப்பையர்.
தினமலர் நாளிதழ் 100 ஆண்டுகளை தாண்டி, மக்களுக்கு சேவை செய்தால் அது இந்தியாவுக்கே பெருமை. டிஜிட்டல் யுகம் வந்தாலும், அச்சு நாளிதழின் ராஜாவாக தினமலர் உள்ளது. ஆன்மிகம் தொடர்பாக செய்திகள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. எனக்கும், தினமலருக்கும் 23 ஆண்டு கால தொடர்பு உள்ளது. தமிழகம், கர்நாடகாவின் அன்றாட விஷயங்களை மிக தெளிவாக மக்களிடம் கொண்டு செல்லும் நாளிதழ்.
அமிஷ்குமார், யு - டியூபர், ஜீவனஹள்ளி.