ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்கும் திட்டம் தொடங்கியது
சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்கும் திட்டத்தை, அமைச்சர்கள் வெங்கடரமணன், காந்திராஜ் ஆகியோர், சென்னையில் நேற்று தொடங்கி வைத்தனர்.
வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதால், தற்போது தமிழகத்தில் வெளிச்சந்தையில் கிலோ வெங்காயம், 60 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.
இதையடுத்து, ரேஷன் கடைகளில் கிலோ வெங்காயம், 35 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்கும் திட்டத்தை, உணவு துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவு துறை அமைச்சர் காந்திராஜன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க ரேஷன் கடையில் நேற்று தொடங்கி வைத்தனர்.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)







