Lifestyle and human interest
சர்க்கரை விலையை கட்டுப்படுத்த குழு அமைப்பு

மதுரை: வெங்காய விலை கிலோ ரூ.60க்கு விற்கப்படும் நிலையில், தமிழக அரசு ரூ.35க்கு ரேஷன் கடைகளில் விற்கிறது. முதற்கட்டமாக மாவட்டத்திற்கு 60 டன் பெரிய வெங்காயம் வரப்பெற்றுள்ளது.
தற்போது நகர்ப்புறத்தில் உள்ள 483 ரேஷன் கடைகளிலும், மூன்று பண்ணை பசுமை காய்கறி அங்காடிகளிலும், பாண்டியன் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் 5 சூப்பர் மார்க்கெட் கடைகளிலும், 2 சுயசேவை பிரிவிலும், ஒரு மினி சூப்பர் மார்க்கெட்டிலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அத்தியாவசிய பொருட்களில் சர்க்கரை (சீனி) விலையும் உயர்ந்துள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் சர்க்கரை விற்பனையின் சந்தை நிலவரத்தை ஆய்வு செய்ய மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் 11 குழுக்களை கலெக்டர் அமைத்துள்ளார். ஒவ்வொரு குழுவிலும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் அல்லது சிறப்பு வருவாய் ஆய்வாளர், கூட்டுறவு சார்பதிவாளர், புள்ளியியல் ஆய்வாளர், தரவு உள்ளீட்டார்கள் இருப்பர்.
இந்த அலுவலர்கள் தினமும் 25 கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களின் விலை, சர்க்கரை விலை விபரம், இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்வர். இதில் ஏதேனும் பொருட்கள் கள்ளச்சந்தையில் பதுக்குவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டோர் மீத குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா எச்சரித்துள்ளார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
