Lifestyle and human interest
ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை
நாமக்கல்:வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை ஏற்றம் காரணமாக, மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் விலையை
வெங்காயத்தின் விலை ஏற்றம் காரணமாக, மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் விலையை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும்
நகர்ப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் ஒரு கிலோ ரூ.35க்கு வெங்காயம்
விற்பனை செய்யப்படும் என, உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் அறிவித்தார்.
இதையடுத்து, தமிழ்நாடு விவசாய கூட்டுறவு விற்பனை இணையத்தில்
இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு, 25 டன் வெங்காயம் கொள்முதல்
செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை
பண்டக சாலை மூலம், 171 நகர்ப்புற ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை
நேற்று துவங்கியது.
விற்பனை சங்கத்திற்கு உட்பட்ட ரேஷன் கடையில், நேற்று நடந்த
நிகழ்ச்சியில், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்
அருளரசு வெங்காயம் விற்பனையை துவக்கி வைத்தார்.