Lifestyle and human interest
ரேஷனில் வெங்காயம் விற்பனை அமைச்சர் துவக்கி வைப்பு
கடலுார், செப். 3– ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனையை அமைச்சர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். கடலுார்

ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனையை அமைச்சர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.
கடலுார் சாவடியில் உள்ள ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜ்குமார், வெங்காய விற்பனையை தொடங்கி வைத்தார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, அப் பொருட்களை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் வெங்காயம் கிலோ ரூ.29க்கு கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் கிலோ ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதில் கடலுார் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 20 டன் வெங்காயம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விற்பனையை துவக்கி வைத்த அமைச்சர் ராஜ்குமார் கூறியதாவது:மாவட்டத்தில் மொத்தம் 268 ரேஷன் கடைகளில் 2.07 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. ஒவ்வொரு ரேஷன் கார்டிற்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு வழங்கப்படுகிறது என்றார்.
நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ., சுந்தரராஜன், இணைப் பதிவாளர் இளஞ்செல்வி, துணை பதிவாளர்கள் மயூரி, சுகந்தலதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
