Lifestyle and human interest
ரேஷன் கடைகளில் வெங்காயம்: விற்பனை கலெக்டர் துவக்கி வைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவுத்துறை மூலம் ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வெங்காயம் விற்பனையை கலெக்டர் துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏழை, எளிய நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், வெங்காய விலை ஏற்றத்தை கட்டுபடுத்தும் வகையில் நகர்ப்புற ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை துவக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்திற்கு 10 டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு கூட்டுறவுத் துறை மூலம் நடத்தப்படும் 64 முழுநேர ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாயக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் நடந்த துவக்க விழாவில் கலெக்டர் பத்மஜா, வெங்காயம் விற்பனையை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளர் சாந்தி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் செயலாட்சியர் ராமச்சந்திரன், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தின் பொது விநியோகத் திட்டம் -2 முதுநிலை ஆய்வாளர் வினோத் மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள், கடை விற்பனையாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.