Lifestyle and human interest
கி.கிரியில் 93 ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை துவக்கம்
கிருஷ்ணகிரி; ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை, கடந்த, 1ம் தேதி சட்டசபையில், உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று, முதல் கட்டமாக தமிழகம் முழுவதுமுள்ள ரேஷன் கடைகள், அமுதம் அங்-காடிகள், கூட்டுறவு பண்டக சாலை என மொத்தம் 8,739 இடங்களில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம், 35 ரூபாய்க்கு விற்-பனை செய்யும் திட்டம் துவங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கட்டமாக, 93 நகர்புற ரேஷன் கடைகளில், ஒரு கிலோ பெரிய வெங்காயம் விற்பனையை, கூட்டுறவு சங்கங்-களின் இணை பதிவாளர் நடராஜன் துவக்கி வைத்து கூறுகையில், ''வெங்காயம் விலை அதி-கரித்துள்ளதால், தமிழக முதல்வர் பொதுமக்க-ளுக்கு குறைந்த விலையில், தரமான வெங்காயம் பொதுவினியோக திட்டத்தில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்படி, முதல்கட்டமாக நகர்புற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் மட்டும், 25 டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து, மற்ற ரேஷன் கடைகளுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்-தப்படும். நல்ல தரமான, சரியான எடையில் பெரிய வெங்காயம் விற்பனை செய்ய வேண்டும் என்று, ரேஷன் கடை பணியாளர்களுக்கு அறிவு-றுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பாதி விலையில் வெங்காயத்தை வாங்கி பயன்பெ-றலாம்,'' என்றார்.
அப்போது, பொதுவினியோக திட்டம் கூட்டுற-வுத்துறை பதிவாளர் சிவகுருநாதன், வட்டார வேளாண் கூட்டுறவு விற்பனை சங்க பொதுமே-லாளர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
