தீபாவளிக்கு ரயிலில் செல்ல 6ம் தேதி முன்பதிவு தொடக்கம்
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி, விரைவு ரயில்களில், வரும் 6ம் தேதி டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வரும் நவம்பர் 8ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ரயில்களில், 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருக்கிறது. இன்னும் சில நாட்களில், தீபாவளி பண்டிகை டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளது.
எனவே, பயணியர் தங்களது பயண தேதியை திட்டமிட்டு, டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். நவ., 5ம் தேதி வியாழக்கிழமை செல்ல இருப்பவர்கள், வரும் 6ம் தேதி; நவம்பர் 6ல் வெள்ளிக்கிழமை பயணம் செய்ய இருப்பவர்கள், வரும் 7ம் தேதியில் முன்பதிவு செய்ய முடியும்.




/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)




