Arts, culture, entertainment and media
தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு... சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது!

தீபாவளிக்கு நவம்பர் 5ஆம் தேதி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது.
தீபாவளி விடுமுறையை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி பயணத்திற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது.
நடப்பாண்டு நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி சொந்த ஊர் செல்வோர்கள் ரயிலில் பயணிக்க ஏதுவாக டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு துவங்கியது. முன்பதிவு தொடங்கிய சில விநாடிகளில் அனைத்து ரயில்களின் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
இதற்கிடையே ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சி செய்து வருவதால் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது. சர்வர் பிரச்சினை காரணமாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் மக்கள் தவிப்புக்குள்ளாகினர்.
தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்களான கன்னியாகுமரி விரைவு ரயில், அனந்தபுரி விரைவு ரயில், நெல்லை விரைவு ரயில், பொதிகை விரைவு ரயில், முத்துநகர் விரைவு ரயில் ஆகிய ரயில்களில் டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்தன. அதேநேரம் நவம்பர் 6ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நாளைய தினமும், நவம்பர் 7ஆம் தேதிக்கான முன்பதிவு வரும் 8ஆம் தேதியும் தொடங்குகிறது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
