Arts, culture, entertainment and media
தீபாவளி பண்டிகைக்கான விரைவு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விரைவு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 6 முதல் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முன்பதிவு மற்றும் பயண தேதிகளின் முழு விவரம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நாளை (செப்டம்பர் 6) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான ரயில் டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்யும் வகையில் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கான முன்பதிவு
🔴 குறிப்பு: 09.09.2026 அன்று, தீபாவளி நாளான 08.11.2026 பயணத்திற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.
தீபாவளிக்குப் பிறகு திரும்பும் பயணத்திற்கான முன்பதிவு
தீபாவளி விடுமுறை முடிந்து பணி மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்குத் திரும்பும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தேதிகளும் பின்வருமாறு:
பயணிகள் தங்களுக்கு தேவையான தேதிகளில் ரயில் டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணத்தைத் திட்டமிடலாம். குறிப்பாக தீபாவளி காலத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், முன்பதிவு தொடங்கும் நேரத்தில் டிக்கெட்டுகளை பதிவு செய்வது பயனுள்ளதாக இருக்கும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

