Arts, culture, entertainment and media
தீபாவளி: ரயில் முன்பதிவு தொடங்கியது!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியது குறித்து...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (செப்.6) தொடங்கியது.
தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு வழக்கமாக 3 மாதங்களுக்கு முன்னரே தொடங்கும்.
தற்போது, நவ. 8 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் 60 நாள்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, நவ. 5 ஆம் தேதி ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்றும், நவ.6 ஆம் தேதி பயணத்துக்கு திங்கள்கிழமையும் (செப்.7), நவ.7-ஆம் தேதி பயணத்துக்கு செவ்வாய்க்கிழமையும் (செப்.8) முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தீபாவளி பண்டிகை முடிந்தபின் ஊர் திரும்புவோர் செப்.10 ஆம் தேதி முதல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Ticket reservations for express trains departing from Chennai for the Diwali festival began on Sunday (Sept. 6).
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

