தவெக தலைமையில் புதிய கூட்டணி.. நாளை பெயர்சூட்டு விழா? தேசியமா.. மாநிலமா?
செய்தியாளர் - ஆனந்தன் தமிழக அரசியலில் தேர்தல் கூட்டணிகள் தொடர்பான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் அமையவுள்ள
தமிழக அரசியலில் தேர்தல் கூட்டணிகள் தொடர்பான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் அமையவுள்ள கூட்டணிக்கு நாளை புதிய பெயர் சூட்டப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், இதில் கூட்டணியின் பெயர் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேர்தல் காலங்களில் கூட்டணிகள் அமைப்பது என்பது அரசியலின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் எந்தக் கட்சி எந்தக் கூட்டணியில் இடம்பெறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் எழுவது வழக்கம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையில் ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ அமைக்கப்பட்டிருந்தது. இதில் காங்கிரஸ், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றிருந்தன. மறுபுறம், அதிமுக தலைமையில் ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ என்ற பெயரில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டன.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)



