Politics
மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக்கூட்டணி: தவெக கூட்டணிக்கு முடிவானது பெயர்

சென்னை: தவெக கூட்டணிக்கு மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு அளிக்கின்றன. த.வெ.க, கூட்டணியில், ம-.தி.மு.க.,வும் இணைந்துள்ளது. தவெக கூட்டணி கட்சிகளின், கூட்டம் இன்று( செப்., 9ம் தேதி) சென்னையில் நடைபெற்றது.
விஜய் தலைமையில் நடந்த இந்தக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைள் கட்சியின் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், தாரகை கத்பட், ஐயுஎம்எல் சார்பில் காதர் மொய்தீன், அமைச்சர் ஷாஜகான், சையத் பாரூக் பாஷா ஆகியோர் பங்கேற்றனர்.
இடைத்தேர்தலுக்கு முன்பு, தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்தும், புதிய கூட்டணியின் பெயர் குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து தவெக கூட்டணிக்கு மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப்பட்டது.
முதல்வர் விஜய் தலைமையில் நடந்த தவெக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் குறித்த பிரத்யேக வீடியோ தினமலர் இணையதளம் மற்றும் யூடியூப் பக்கங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
https://www.youtube.com/watch?v=Tlr6WzFAKNw