Politics
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தலைவர் விஜய்: மாணிக்கம் தாகூர்
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்பது இந்தியா கூட்டணியின் ஒரு பகுதி என மாணிக்கம் தாகூர் பேசியது குறித்து...
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்பது இந்தியா கூட்டணியின் ஒரு பகுதி என்றும், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்பதுதான் தனது கருத்து எனவும் குறிப்பிட்டார்.
சென்னை பனையூரில் செய்தியாளர்களுடன் மாணிக்கம் தாகூர் பேசியதாவது:
முதல்வர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தவெக கூட்டணியின் பெயர் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி; இக்கூட்டணியின் தலைவர் விஜய். தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடும் கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
சரியான புரிதலுடன் கூட்டணி சிறப்பாக செயல்படும். புதிய கட்சிகளை இணைக்கும் நகர்வுகள் தொடங்கப்படும்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை கூட்டணி முடிவு செய்து அறிவிக்கும்.
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்பது இந்தியா கூட்டணியின் ஒரு பகுதியே. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்பதுதான் என் கருத்து.
TVK alliance leader joseph Vijay Congress Manickam Tagore
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.