Politics
இன்றைய செய்திகள் செப். 9 - நேரலை!
இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...
முதல்வர் ஜோசப் விஜய் - (கோப்புப் படம்)
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு
மதச்சார்பின்மை மற்றும் சமூகநீதியை இந்திய அளவில் எடுத்துரைக்கும் கூட்டணி என தவெக தலைமையிலான கூட்டணிக் குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்றும் தொடரும் என ஐயுஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் கூறியுள்ளார்.
2 இலக்குகளை கூட்டணியின் பெயரில் வைத்துள்ளோம்: வைகோ பேட்டி
தங்களின் 2 இலக்குகளையே தவெக தலைமையிலான கூட்டணியின் பெயரில் வைத்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (செப். 9) தெரிவித்தார்.
தவெக கூட்டணியின் தலைவர் விஜய்: மாணிக்கம் தாகூர்
தவெக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தலைவராக விஜய் செயல்படுவார் என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று (செப். 9) தெரிவித்தார்.
இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு!
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிக்கப்படுவார்கள் என கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் மதுராந்தகம் தொகுதியில் வழக்குரைஞர் ஐ. பரந்தாமன், தாராபுரத்தில் வழக்குரைஞர் எஸ். சுகன்யா போட்டியிடுவார்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?
சென்னையில் முன்விரோதம் காரணமாக தவெக நிா்வாகி கண்ணன் (45)வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பரணி (20) உள்ளிட்ட 5 போ் கைது செய்யப்பட்டனா்.
செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!
தமிழ்நாட்டில் ரூ. 10,000 கோடியில் மேற்கொள்ளப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் மிகப்பெரிய அளவிலான விதிமீறல்கள் நடந்திருப்பதாக தலைமை கணக்கு தணிக்கையாளா் (சிஏஜி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் போட்டியிடலாமா? அல்லது புறக்கணிக்கலாமா? என்பது தொடா்பாக திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகின்றது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு!
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை உசிலம்பட்டியில் வருகின்ற செப். 25 ஆம் தேதி முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார்.
நெரிசலான பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் வேண்டாம் என வலியுறுத்தியுள்ள பாமக தலைவர் அன்புமணி, சென்னைக்கு வெளியில் தனி நிர்வாக நகரம் அமைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜாவுக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டதை அடுத்து சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் விசாரித்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதால் மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,822 கனஅடியாக குறைந்துள்ளது.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.