Politics
"மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள்" - மாணிக்கம் தாகூர்

2029 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளருக்காக விஜய் பிரச்சாரம் செய்வார் என மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணிக்கு ‘மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், தமிழ்நாட்டில் மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியும், தேசிய அளவில் இந்தியா கூட்டணி எனவும் தெரிவித்தார்.
