தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
திருப்பூர்: தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு அக். 6-ம் தேதி நடைபெற உள்ளதால், வாக்காளர்கள் வசதிக்காக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான தகவல், சந்தேகம் மற்றும் புகார்களுக்கு தாராபுரம் தாலுகா அலுவலகம் 04258- – 220399, கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 0421- – 2210040, 2210042, 2210043, 2210054, கட்டணமில்லா எண் 1800- – 4250 – 045 மற்றும் மாவட்ட தேர்தல் தொடர்பு மையம் 1950 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.





