Politics
தாராபுரம் இடைத்தேர்தல் அ.தி.மு.க. ஆலோசனை
திருப்பூர்: தாராபுரம் இடைத்தேர்தல் தொடர்பாக திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம், மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட அவைத்தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வேல்குமார் சாமிநாதன் முன்னிலைவகித்தார். தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் களமிறங்கும் வேட்பாளர் பானுமதியை வெற்றிபெறச் செய்ய, களப்பணிகளில் தீவிரம்காட்டவேண்டும் என, முடிவு செய்யப்பட்டது. அ.தி.மு.க. மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.