Politics
தேர்தல் நடத்தை விதி அமல் குறைகேட்பு கூட்டம் ரத்து
திருப்பூர்: தாராபுரம் சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், அரசு விழாக்கள் மற்றும் குறைகேட்பு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கோட்டம் மற்றும் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டன.
நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திருப்பூர் வருவாய் கோட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டமும் தேர்தல் நடத்தை விதிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளது.