Politics
செலவின பார்வையாளரிடம் மக்கள் புகார் தெரிவிக்கலாம்
திருப்பூர்: தாராபுரம் இடைத்தேர்தலில் தேர்தல் செலவின முறைகேடுகள் குறித்து, செலவின பார்வையாளரிடம் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, தேர்தல் கமிஷன் சார்பில் பொதுப்பார்வையாளர், போலீஸ் பார்வையாளர், செலவின பார்வையாளர் என மூன்று பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், தேர்தல் செலவின பார்வையாளராக ஐ.ஆர்.எஸ். அலுவலர் அனுப்பம் மகும்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் செலவினங்கள் தொடர்பான புகார்கள் மற்றும் கருத்துகளை 74183 62261 என்ற மொபைல் போன் எண்ணில் தெரிவிக்கலாம். மேலும், தாராபுரம் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை அறை எண் 1-ல் தினமும் காலை 11:00 முதல் மதியம் 12ன:00 மணி வரை செலவின பார்வையாளரை நேரில் சந்தித்தும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.