நேபாள பெருவெள்ளம்: 1,280-ஐ கடந்த பலி எண்ணிக்கை: 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குறித்த தகவல் இல்லை
காத்மாண்டு, நேபாள பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் அடுத்தடுத்து பிணமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதி
இமயமலை பிராந்தியத்தில் கடந்த மாதம் 26-ந்தேதி பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் பெருக்கெடுத்த வெள்ளம் மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தை நாசமாக்கியது. கரைபுரண்டு பெருவெள்ளத்துடன் வந்த சேறும், சகதியும் உள்கட்டமைப்புகளை முற்றிலும் சீரழித்தன.
நேபாளம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த பேரிடரில் ஆயிரக்கணக்கான மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் மாயமாகி உள்ளனர்.
இவ்வாறு அடித்துச் செல்லப்பட்டவர்கள் அடுத்தடுத்து பிணமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.





/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


