Environment
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு : 10 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட மூதாட்டி!!

நேபாள வெள்ளத்தில் 10 நாட்களுக்குப் பிறகு 69 வயது மூதாட்டி, சீன இளைஞர் உள்ளிட்டோர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
நேபாள வெள்ளத்தில் மாயமானவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருகின்றன.
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 64 வயதான மூதாட்டி 10 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 300-ஐ கடந்தது. 5 ஆயிரத்து 600 பேர் காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நுவாகோட் மாவட்டத்தில் இடிந்து கிடந்த வீட்டின் 4 ஆவது தளத்தில் இருந்து 69 வயதான மூதாட்டி 10 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.
இதே போன்று, திரிசூலியில் முதலாவது நீர் மின் சுரங்கத்தில் இருந்து சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் உயிருடன் மீட்கப்பட்டார்.
இதையும் படிங்க: 8 தமிழ் மாணவர்கள் உயிரிழந்த விபத்து - வெளியான அதிர்ச்சி தகவல்... குடும்பத்தின் ஒரே நம்பிக்கை..!
மீட்கப்பட்ட இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 10 நாட்களுக்குப் பிறகு 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டது, மீட்புப் படை வீரர்களுக்குப் புது உத்வேகத்தை அளித்துள்ளது.
