Environment
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை என்ன? தமிழ்நாடு அரசு விளக்கம்

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய,மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
நேபாள வெள்ளத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும், 3 அதிகாரிகள் காத்மாண்டுவில் முகாமிட்டு தேடுதல் பணிகளை கண்காணித்து வருவதாகவும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளம்,நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தமிழகத்தில் இருந்து கைலாசத்துக்கு யாத்திரை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்டோர் காணாமல் போயுள்ளனர். அவர்களின் விவரங்களை குடும்பத்தினருக்கு தெரிவிக்கவும்,மீடபு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த பர்வேஷ் முஷ்ரப் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய,மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய மாநில அரசுகள் தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
அதில், காணாமல் போன 85 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. 75 பேரின் குடும்பத்தினரிடம் மரபணு மாதிரிகள் பெறப்பட்டு, அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இருந்து 3 அதிகாரிகள் காத்மாண்டுவில் முகாமிட்டு தேடுதல் பணிகளை கண்காணித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தேடுதல் பணிகளில் அடுத்தக்கட்ட முன்னேற்றம் குறித்த அறிக்கைகளை தாக்கல் செய்ய மத்திய,மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
