Environment
நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்!

நேபாளத்தில் 10 ஆவது நாளாக நடைபெறும் வெள்ளம் மீட்புப் பணிகள் குறித்து...
நேபாளத்தில் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர்... - ANI
நேபாளத்தில், வெள்ளம் மீட்புப் பணிகள் 10 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், மீட்புப் பணிகளில் 20 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திபெத்தில் பனிப்பாறைகள் உடைந்து நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி அற்றில் கடந்த ஆக. 26 ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அதன் கரையில் அமைந்திருந்த பாலங்கள், கட்டடங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன.
இந்தப் பேரிடரில் இதுவரை 1,344 பேர் பலியானது தெரியவந்துள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான மக்களைக் காணவில்லை எனக் கூறப்படும் நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் 10 ஆவது நாளான இன்றும் (செப். 5) தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நுவாக்கோட் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட தடி ஆற்றின் குறுக்கே கயிற்றுப் பாலம் கட்டும் பணியில் நேபாள ராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட நுவாக்கோட் மற்றும் ரசுவா மாவட்டங்களில் 20 ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக, நேபாள ராணுவம் அறிவித்துள்ளது.
முன்னதாக, பேரிடர் மீட்பு உதவியாக இந்தியாவில் இருந்து சுமார் 95 டன் நிவாரணப் பொருள்கள் மற்றும் சிறப்பு மீட்புக் குழுக்கள் நேபாளத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
20 helicopters are engaged in rescue operations in Nepal as the effort to rescue flood-affected people enters its tenth day.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.