Environment
நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு

நேபாள வெள்ளத்தில் சிக்கியவர்களில் இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை என அறிவிப்பு...
நேபாள வெள்ளத்தில் சிக்கியவர்களில் இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
திபெத்தில் பனிப்பாறைகள் உடைந்து நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த ஆக. 26 ஆம் தேதி ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் அங்குள்ள கட்டமைப்புகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்தப் பேரிடரில், இதுவரை 1,295 பேர் பலியாகியுள்ள நிலையில், சுமார் 5,000 பேர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு மீட்புப் பணிகளில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேபாளத்துக்குச் சென்று அங்கு வெள்ளத்தில் சிக்கியவர்களில் இன்னும் 275 பேரைக் காணவில்லை எனவும், அவர்களைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இன்று (செப். 4) மத்திய வெளியுறவுச் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
“எங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை. இதுபற்றி, நேபாள அரசுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இதில், நேபாள அதிகாரிகளின் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். இதுவரை 166 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் சீனாவில் இருந்து 1,907 இந்தியர்கள் பாதுகாப்பாக நேபாளத்துக்கு வந்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு 95 டன் நிவாரணப் பொருள்கள் மற்றும் மீட்புக் குழுக்கள் இந்தியா சார்பில் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The Union Ministry of External Affairs has announced that 275 Indians remain missing following the floods in Nepal.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.