முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு 2 நாள் ரேஷன் பொருள் வினியோகம்
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தாயுமானவர் திட்-டத்தின் மூலம் நாளை, 5ம் தேதி மற்றும், 7-ம் தேதிகளில், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்-றுத்தினாளிகளின் இல்லங்களுக்கு சென்று, ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்
படுகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமி-ழக முதல்வரின் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்-படும் ரேஷன் கடைகளில், 29,287 வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைகளுக்கு, தாயுமானவர் திட்டத்தின் மூலம், அவர்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்க, மொத்தம், 309 குழு அமைக்-கப்பட்டு, 463 வாகனங்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி, மாவட்டத்தில் நாளை, 5-ம் தேதி மற்றும், 7-ம் தேதிகளில் தாயு-மானவர் திட்டத்தின் மூலம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டை-களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்-யப்படும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.






