Lifestyle and human interest
இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் நாளை, 7ம் தேதி வினியோகம்
நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முதியோர்களுக்கு, நாளை (5ம் தேதி) மற்றும் 7ம் தேதிகளில் இல்லம் தேடி ரேஷன்
மாவட்டத்தில் உள்ள முதியோர்களுக்கு, நாளை (5ம் தேதி) மற்றும் 7ம்
தேதிகளில் இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து, நாமக்கல் கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மாவட்டத்தில், இல்லம் தேடி சென்று ரேஷன் பொருட்களை வினியோகிக்கும்
திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகள் மூலமாக, 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்
மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று,
அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இம்மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் நாளை மற்றும் 7ம் தேதி ஆகிய
நாட்களில் வினியோகம் செய்யப்பட உள்ளது. முதியோர் மற்றும் மாற்றுத்
திறனாளிகள் இதை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு கூறியுள்ளார்.