Lifestyle and human interest
மா.திறனாளிகளுக்கு 2 நாட்கள் ரேஷன் பொருட்கள் வழங்கல்

தர்மபுரி; தர்மபுரி மாவட்டத்தில், வரும், 5 மற்றும் 7ம் தேதிகளில், வீடு தேடி சென்று வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தி-யாவசிய பொருட்கள் வழங்கப்படும் என, கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தர்மபுரி மாவட்டத்தில், 1,113 ரேஷன் கடைகளை சேர்ந்த, 36,516 குடும்ப அட்டைதாரர்களுக்கு, (மாற்றுத்திறனாளிகள், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்) அவர்களின் வீடுகளுக்கு சென்று, அத்-தியாவசிய பொருட்கள் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு செப்., மாதம் வரும், 5 மற்றும் 7ம் தேதி வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட, அத்தியா-வசிய பொருட்கள் வழங்கப்பட உள்ளது. எனவே, பயனாளர்கள் அரசின் இச்சலுகையை பயன்ப-டுத்தி, பொருட்களை பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.