Lifestyle and human interest
முதியோருக்கு ரேஷன் பொருள் இன்று முதல் வினியோகம்
செங்கல்பட்டு, செப். 5– வீடு தேடி பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், முதியோருக்கு இன்று முதல் நாளை மறுநாள்
வீடு தேடி பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், முதியோருக்கு இன்று முதல் நாளை மறுநாள் வரை ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் வீரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், வீடு தேடி பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ்,70 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ரேஷன் பொருட்களை அவர்கறது வீடுகளுக்கே சென்று ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில், 70 வயதிற்கும் மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் 34,219 ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.
செப்., மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இன்று மற்றும் 6,7 தேதிகளில், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளின் இல்லத்திற்கே சென்று வழங்கப்பட உள்ளனர்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.