Lifestyle and human interest
இல்லம் தேடி ரேஷன் இன்று, 7ல் கிடைக்கும்
நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று ரேஷன்
மாவட்டத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே
நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி, இன்று மற்றும் 7 ஆகிய
தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் மதுபாலன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் வாயிலாக
அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் முதியோர்கள்
மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து
செல்வதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில், அவர்களின்
இல்லங்களுக்கே நேரடியாக சென்று பொருட்களை வினியோகிக்கும் திட்டம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விலைக்கடைகள் வாயிலாக வயது, 65க்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும்
மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசிய
பொருட்களை வழங்கும் பணி, இன்று, 7 ஆகிய தேதிகளில் நடக்கும். எனவே,
மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய முதியோர்கள் மற்றும்
மாற்றுத்திறனாளிகள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.