Lifestyle and human interest
முதியோர், மாற்றுத்திறனாளிக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம்
காஞ்சிபுரம்: “தாயுமானவர் திட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு இன்றும், நாளை மறுதினமும் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கப்படும்,” என, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வெளியிட்ட செய்திகுறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு, தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, செப்டம்பர் மாதத்திற்கான பொருட்கள் இன்றும், நாளை மறுதினமும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளன.
எனவே, தகுதியான குடும்ப அட்டைதாரர்கள், தங்களது வீடுகளுக்கு வரும் ரேஷன் கடை பணியாளர்களிடம் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.