Lifestyle and human interest
வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருள் விநியோகம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வரின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இன்று முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 29 ஆயிரத்து 762 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். முதல்வரின் பொது விநியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கடை விற்பனையாளர்கள் மாதம் தோறும் இவர்களின் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
அதன்படி, இன்று 7ம் தேதி முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று பொது விநியோக திட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளது. தகுதியுடைய கார்டுதாரர்கள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.