சிவகங்கையில் பயங்கரம்: சொகுசு காரில் மது அருந்திய 2 வாலிபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை
சிவகங்கை,சிவகங்கை அருகே காரில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த காளையார்கோவிலை சேர்ந்த 2 இளைஞர்களை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் மாவட்டத
சிவகங்கை அருகே காரில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த காளையார்கோவிலை சேர்ந்த 2 இளைஞர்களை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பழலை நகர் கொடிக்காடு கண்மாய் பகுதிக்கு ஒரு சொகுசு காரில் வந்தனர். அங்குள்ள ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் காரை நிறுத்திவிட்டு, அதன் அருகே அமர்ந்து அவர்கள் மது அருந்தி கொண்டிருந்ததாக தெரிகிறது.
அப்போது, அந்த பகுதிக்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் திடீரென வந்தனர். அவர்கள் காரின் அருகே அமர்ந்திருந்த இளைஞர்களை நோக்கி ஆக்ரோஷமாக பாய்ந்தனர். ஆபத்தை உணர்ந்த இரண்டு இளைஞர்களும் தப்பிப்பதற்காக கண்மாய் பகுதியை நோக்கி ஓடினர். ஆனாலும் விடாமல் துரத்திய அந்த மர்ம கும்பல், இருவரையும் ஓட ஓட விரட்டி பிடித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டியது.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

