Crime, law and justice
சிவகங்கை இரட்டை கொலை 5 பேர் கைது; உறவினர்கள் மறியல்
சிவகங்கை: சிவகங்கை அருகே தெய்வேந்திரன், 24, பூப்பாண்டி, 25, இருவரும் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில், ஐவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், குருந்தணிவாரியநேந்தல் தெய்வேந்திரன், சிறுவேலங்குடி பூப்பாண்டி. இருவரும் நேற்று முன்தினம் மதியம், காரில் கொடிக்காடு கண்மாய்க்கு சென்று மது அருந்தியபோது, டூ - வீலர்களில் வாள்களுடன் வந்த, 15 பேர் கும்பல், அவர்களை வெட்டி கொலை செய்தது.
டி.எஸ்.பி., அமலஅட்வின் தலைமையில், ஐந்து தனிப்படையினர் விசாரித்து, பில்லுார் பாலமுருகன், 24, தனராஜ், 19, சந்தோஷ், 19, மாத்துார் சதீஷ்குமார், 25, அழுபிள்ளைதாங்கி காளீஸ்வரன், 23, உட்பட, ஐந்து பேரை கைது செய்தனர்.
தெய்வேந்திரன், பூப்பாண்டியின் உடல்களை அவர்களது உறவினர்கள் வாங்க மறுத்து, சிவகங்கை அரண்மனை வாசலில், நேற்று காலை முதல் மதியம் வரை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், மதுரை -- தொண்டி சாலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களிடம், கூடுதல் எஸ்.பி., பிரான்சிஸ், பேச்சு நடத்தி கலையச் செய்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


