Crime, law and justice
சிவகங்கையில் இரு வாலிபர்கள் கொலை

சிவகங்கை: சிவகங்கை அருகே கொடிக்காடு கண்மாயில் இளைஞர்கள் இருவரை ஓட ஓட விரட்டி வெட்டி முகத்தை சிதைத்து கொலை செய்து தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே குருந்தணி வாரியேந்தல் கண்ணன் மகன் தெய்வேந்திரன் 24. இவரது நண்பர் சிறுவேலங்குடி சுப்பிரமணி மகன் பூப்பாண்டி 25. இருவரும் நேற்று மதியம் 2:30 மணிக்கு காரில் பையூர் கொடிக்காடு பகுதிக்கு வந்தனர்.
அங்குள்ள கண்மாய்க்கரை அருகே காரை நிறுத்தி விட்டு கண்மாய் கரையில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அங்கு டூவீலரில் வந்த கும்பல் இருவரையும் ஓட ஓட விரட்டி வெட்டி முகத்தை சிதைத்து கொலை செய்துள்ளனர்.
அருகில் நிறுத்தப்பட்டிருந்த அவர்களது நம்பர் இல்லாத புதிய காரையும் உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பினர். அருகில் இருந்தவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் இருவரது உடலையும் மீட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்.பி., அபிேஷக் குப்தா சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.
கொலையில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க டி.எஸ்.பி., அமலஅட்வின் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மோப்பநாய் லைலா வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி.,கேமராக்களை ஆய்வு செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


