Crime, law and justice
சிவகங்கையில் இருவர் விரட்டி விரட்டி கொ*!

சிவகங்கையில் இரண்டு பேர் விரட்டி விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் பழமலை நகர் கொடிக்காடு கண்மாய் பகுதியில் காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன் மற்றும் பூப்பாண்டி ஆகிய இருவர் விரட்டி விரட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இருந்த இருவரின் உடக்களையையும் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆகாஷ் குப்தா சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். இந்தக் கொலை எதற்காக நடைபெற்றது? இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் இருந்த புதிய கார் ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு மோப்பநாய் உதவியுடன் சம்பவம் நடைபெற்ற பகுதி முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், சம்பவ இடத்தில் தடயங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்து கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)