Crime, law and justice
சிவகங்கையில் ஓட ஓட விரட்டி 2 வாலிபர்கள் கொடூர கொலை

சிவகங்கை: சிவகங்கை அருகே கொடிக்காடு கண்மாயில், தெய்வேந்திரன், 24, பூப்பாண்டி, 25, ஆகிய இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே குருந்தணி வாரியேந்தல் தெய்வேந்திரன், அவரது நண்பர் சிறுவேலங்குடி பூப்பாண்டி ஆகிய இருவரும், நேற்று மதியம் 2:30 மணிக்கு காரில் பையூர் கொடிக்காடு வந்தனர்.
அங்குள்ள கண்மாய்க்கரை அருகே காரை நிறுத்தி விட்டு, கண்மாய் கரையில் அமர்ந்து மது அருந்தினர். அங்கு, இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல், இருவரையும் ஓட ஓட விரட்டி வெட்டி, முகத்தை சிதைத்து கொலை செய்தது; அருகில் நிறுத்தப்பட்டிருந்த அவர்களின் நம்பர் இல்லாத புதிய காரையும் உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பியது.
தகவலறிந்த போலீசார், இருவரது உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எஸ்.பி., அபிஷேக் குப்தா சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். கொலையாளிகளை பிடிக்க, டி.எஸ்.பி., அமல அட்வின் தலைமையில் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய் லைலா வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தனிப்படை போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


