பிரதமரின் 76-வது பிறந்தநாள்.. 25 ஆண்டுகால சேவையைச் சிறப்பிக்கும் 'சேவா சங்கல்ப்' திட்டம் தொடக்கம்!
பிரதமரின் இந்தப் பயணத்தை வெறும் அரசியல் சாதனையாக மட்டும் பார்க்காமல், தேசத்திற்கும் மக்களுக்கும் ஆற்றப்பட்ட அர்ப்பணிப்புள்ள சேவையாகப் பார்க்க வேண்டும்
பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாள் மற்றும் அவரது 25 ஆண்டுகால பொதுவாழ்வுச் சேவையைக் குறிக்கும் வகையில், 'சேவா சங்கல்ப் அபியான்' (Seva Sankalp Abhiyan) என்ற ஒரு மாத கால மக்கள் சேவைப் பிரச்சாரத்தை பாஜக இன்று நாடு முழுவதும் தொடங்கியது.
இந்தப் பிரச்சாரம் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை ஒரு மாத காலத்திற்குத் தொடர்ந்து நடைபெறவுள்ளது. செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடியின் பிறந்தநாளைக் குறிக்கும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் அவர் மக்கள் சேவையில் கால் பதித்து 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன.











/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
