Politics
இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா..? - கனிமொழி கேள்வி

இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா..? என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கேள்வி எழுப்பியிருப்பது தொடர்பாக...
இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா..? கனிமொழி கேள்வி - கோப்புப்படம்
சென்னையில் தவெக நிா்வாகி மா்மக் கும்பலால் சனிக்கிழமை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிய நிலையில், இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா..? என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக வட்ட செயலராக இருந்தவா் வண்ணாதுறை கண்ணன். இவா் சில மாதங்களுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைத்துக்கொண்டாா். இந்த சூழலில், சனிக்கிழமை இரவு அடையாா் வண்ணாதுறை ராமசாமி அவென்யூவில் அவரை மா்மக் கும்பல் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது.
சாஸ்திரி நகா் போலீஸாா் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனா்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா். இது அரசியல் ரீதியான படுகொலையா அல்லது தனிப்பட்ட காரணங்கள் ஏதேனும் உள்ளனவா என பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா..? என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:
தலைநகர் சென்னையின் மையப்பகுதியிலேயே ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்பட்ட நபர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதோடு, அண்மையில் தவெகவில் இணைந்தவர் எனவும் கூறப்படுகிறது.
மேலும், வடமாநிலத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஒருவரும் போதை கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா..? என்று எண்ணும் அளவுக்கு அதிர்ச்சி அளிக்கும் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை முழுவதுமாக செயலிழந்துவிட்டதற்கும், தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதற்கும் இதுவே சாட்சி என அவர் கூறியுள்ளார்.
Is this a capital city or a city of murder? – Kanimozhi asks
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.