Politics
த,வெ.க., வில் இணைந்த ரவுடி கொலை சட்டம்– ஒழுங்கு: உதயநிதி கவலை
சென்னை, செப். 7– ‘த.வெ.க., வில் இணைந்த ரவுடி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதான் தமிழகத்தின் சட்டம்–ஒழுங்கு
‘த.வெ.க., வில் இணைந்த ரவுடி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதான் தமிழகத்தின் சட்டம்–ஒழுங்கு நிலை’ என, எதிர்கட்சித்தலைவர் உதயநிதி கூறியுள்ளார்.
இன்று முதல்வரின் காவல் துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக, அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார்.
அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க., வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவர் சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழகத்தின் ‘வெற்றி சட்டம்-– ஒழுங்கு’ நிலை.
தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா?
இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாக த.வெ.க., இருப்பதை நினைத்து வருந்துவதா? பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு உதயநிதி கூறியுள்ளார்.