Politics
தவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்

தவெக நிர்வாகி கண்ணன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல் துணை ஆணையரும் காவல் ஆய்வாளரும் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டது குறித்து...
சென்னையில் தவெக நிர்வாகி கண்ணன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல் துணை ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகிய இருவரும் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன், அதிமுகவிலிருந்து விலகி சமீபத்தில் தவெகவில் இணைந்தார். இவர் மீது 2 கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்கு என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவில் கட்சி அலுவலகத்துக்கு வெளியே கண்ணனை மர்ம நபர்கள் சிலர் கும்பலாகச் சேர்ந்து, சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இந்தச் சம்பவத்தில் கண்ணன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், கண்ணனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணையின் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அடையாறு காவல் துணை ஆணையர் கார்த்திகேயனும் சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் ரோஹிணியும் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
DCP Karthikeyan and a Police Inspector Rohini have been placed on the reserve list following the murder of TVK functionary Kannan in Chennai
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.