Politics
“தலைநகரமா? கொலை நகரமா? காவல்துறை முழுவதுமாக செயலிழந்துவிட்டது” – கனிமொழி எம்.பி.
சென்னை அடையாறில் தவெக நிர்வாகி கண்ணன் கொலை. திமுக எம்.பி. கனிமொழி, "இது தலைநகரமா, கொலை நகரமா?" என கேள்வி.

சென்னை, அடையாறில் தவெக நிர்வாகி கண்ணன் என்பவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்ற சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் முதலமைச்சரும், காவல்துறை அமைச்சருமான விஜய், நாளை சட்டப்பேரவையில் பதில் அளிக்க உள்ள நிலையில், தவெக நிர்வாகியே ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை இதுவரை ஐந்து பேரை கைது செய்து விசாரித்து வருகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு சிவா என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சொல்லப்பட்டுவரும் நிலையில், இந்தக் கொலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு சட்ட ஒழுங்கு குறித்தும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழி, “இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா என்று எண்ணும் அளவுக்கு அதிர்ச்சி அளிக்கும் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை முழுவதுமாக செயலிழந்துவிட்டதற்கும், தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதற்கும் இதுவே சாட்சி” என காட்டமாக விமர்சித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
தலைநகர் சென்னையின் மையப்பகுதியிலேயே ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்பட்ட நபர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதோடு, அண்மையில் தவெகவில் இணைந்தவர் எனவும் கூறப்படுகிறது. மேலும், வடமாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவரும் போதை…
இது குறித்து கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில், “தலைநகர் சென்னையின் மையப்பகுதியிலேயே ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்பட்ட நபர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதோடு, அண்மையில் தவெகவில் இணைந்தவர் எனவும் கூறப்படுகிறது. மேலும், வடமாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவரும் போதை கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா என்று எண்ணும் அளவுக்கு அதிர்ச்சி அளிக்கும் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை முழுவதுமாக செயலிழந்துவிட்டதற்கும், தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதற்கும் இதுவே சாட்சி” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நாளை(18.09.2026) மின்தடை அறிவிப்பு
தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நாளை மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
