விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாில், விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
திருக்கோவிலுார் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட திருக்கோவிலுார் மற்றும் உளுந்துார்பேட்டை தாலுகாவைச் சேர்ந்த இந்து முன்னணி மற்றும் விநாயகர் சிலை அமைப்பாளர்கள் பங்கேற்ற பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.
தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். பொறுப்பு ஆர்.டி.ஓ., செந்தில்குமார் தலைமை தாங்கி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், வழிகாட்டு நெறிமுறைகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.


